Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

வட, கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரத போராட்டம்: அநுர வருவதால் தடை கேட்டு மனுத்தாக்கல்

T

The Leader Desk

ஜனவரி 29, 2025 • 10:53 AM

வட, கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரத போராட்டம்: அநுர வருவதால் தடை கேட்டு மனுத்தாக்கல்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போராட்டம் இன்று (29) கிழக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பமானது.
  • ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
  • இப் போராட்டம் வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எழுத்து அளவு:

போராட்டம் இன்று (29) கிழக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பமானது.

இப் போராட்டம்  வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

"அரசாங்கம் இனியும் காலதாமதப்படுத்தாமல் உடனடியாக எங்களுக்கான அரச வேலைவாய்ப்பை பரீட்சை இன்றி உறுதிப்படுத்து" என்ற கோரிக்கைக்கு அமைவாக இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்று வருகின்றது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில், தேர்தல் காலங்களில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கி இருந்தபோதும் வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சிறந்த தீர்வினை பெற்று தருமாறு கோரியும் இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.

பொலிஸார் மனுத்தாக்கல்

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.

ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.

இந்நிலையில் போராட்டம் நடத்துவதை தடை செய்யக்கோரி யாழ்ப்பாணம் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் மனுத்தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஐவரை நாளைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்ப யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தடை உத்தரவு தொடர்பான மனு மீதான விசாரணை நாளைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற உள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...