Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நினைவேந்தல்

T

The Leader Desk

ஜனவரி 29, 2025 • 2:44 AM

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நினைவேந்தல்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நிறைவு நினைவேந்தல், மட்டக்களப்பில் நேற்று (28) அனுஷ்டிக்கப்பட்டது.
  • கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் அல்லது இறால் பண்ணைப் படுகொலைகள், 1987ஆம் ஆண்டு ஜனவரி 28, 29, 30 ஆகிய நாட்களில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலையில் நடந்தது.
  • இதில் 157 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • “இந்த 37 வருடங்களில் இந்நாடு பல ஜனாதிபதிகளைக் கண்டாலும், தீர்வு எதுவும் இல்லாத நிலையே காணப்படுகிறது.
எழுத்து அளவு:

- கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நிறைவு நினைவேந்தல், மட்டக்களப்பில் நேற்று (28) அனுஷ்டிக்கப்பட்டது.

கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் அல்லது இறால் பண்ணைப் படுகொலைகள், 1987ஆம் ஆண்டு ஜனவரி 28, 29, 30 ஆகிய நாட்களில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலையில் நடந்தது. இதில் 157 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

நேற்றைய நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு, உயிரிழந்தவர்களின் உறவினர்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், “இந்த நாட்டில் ஜே.ஆர் ஜனாதிபதியாக இருந்த காலம் தொடக்கம் அநுரகுமார திசாநாயக்க காலம் வரையிலும், இனப்படுகொலைகளுக்கு நீதியைத் தராத நிலையிலேயே நாங்கள் நினைவேந்தல்களை செய்து வருகின்றோம் என்றார்.

“இந்த 37 வருடங்களில் இந்நாடு பல ஜனாதிபதிகளைக் கண்டாலும், தீர்வு எதுவும் இல்லாத நிலையே காணப்படுகிறது. 1987ஆம் ஆண்டு இதே தினத்தில், 33ஆண்டுகளுக்கு முன்பு கொக்கட்டிச்சோலை இறால் வளர்ப்பு என்று கூறுகின்ற மகிழடித்தீவு, முதலைக்குடா இறால் வளர்ப்புப் பண்ணை, படுவான்கரை பெரு நிலத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலையில் 157க்கும் அதிகமானவர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள். அதனைவிட கணக்கெடுக்க முடியாத வகையில் படுகொலைகள் முன்னெடுக்கப்பட்டன.

“பாரிய இனப்படுகொலையொன்று முன்னெடுக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு என்பது, கிழக்கு மாகாணத்தில் இந்த கொக்கட்டிச்சோலை பகுதியில் பெரியளவிலான படுகொலை முன்னெடுக்கப்பட்டது.

“அதன்பின்னர், இந்திய - இலங்கை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், அந்த இனப்படுகொலைகள் முள்ளிவாய்க்கால் வரையில் தொடர்ந்தன. கொக்கட்டிச்சோலை படுகொலையென்பது, அன்றைய காலகட்டத்தில் சர்வதேச ரீதியாக பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.

“இன்று 38ஆவது ஆண்டினை நினைவுகூரும் போது கூட, படுகொலை செய்தவர்கள் மீதோ அதன் பின்னாளிருந்தவர்கள் மீதோ, எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

kok.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...