Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதுதான் அனர்தங்களுக்கு வழிவகுக்கிறது’

T

The Leader Desk

ஜனவரி 29, 2025 • 2:33 AM

‘இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதுதான் அனர்தங்களுக்கு வழிவகுக்கிறது’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக, யாழ்.
  • “நான் அந்த பகுதிக்கு விஜயம் சென்றபோது, மக்கள் கண்ணீர் மல்க இந்திய இழுவைப் படகுகளை நிறுத்துங்கள் எங்களால் வாழ முடியாதுள்ளது என கூறினார்கள்.
  • மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் நீர்வளத் துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக, யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் நீர்வளத் துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

வடமராட்சிக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட  சம்பவம் தொடர்பில்கருத்துத் தொரிவித்த போதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடாதீர்கள், எமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அளிக்காதீர்கள் என, நாங்கள் பலமுறை இந்திய மீனவர்களை தயவாகக் கேட்டுள்ளோம். அண்மையில் கூட, நெடுந்தீவு மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் இந்திய இழுவைப் படகுகள் அத்து மீறி நுழைந்து மீனவர்களின் வலைகளை நாசப்படுத்தியதுடன் அவர்களை பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களாக ஆக்கியிருந்தனர்.

“நான் அந்த பகுதிக்கு விஜயம் சென்றபோது, மக்கள் கண்ணீர் மல்க இந்திய இழுவைப் படகுகளை நிறுத்துங்கள் எங்களால் வாழ முடியாதுள்ளது என கூறினார்கள். எமது மீனவ மக்களை இந்திய அத்துமீறிய மீனவர்கள் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை எக்காரணத்தினாலும் அனுமதிக்க முடியாது.

“எமது இலங்கை கடற்படை, தமது கடல் எல்லையை பாதுகாப்பதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அத்துமீறும் இந்திய மீன்பிடிப் படகுகளை கைது செய்வது வளமையான செயற்பாடாகக் கொண்டுள்ளனர்.  

“கைது நடவடிக்கைகளில் ஒத்துழைக்காத படகுகளை துரத்தும் போது சில அசம்பாவிதங்கள் கடலில் ஏற்படுகின்றன. இவை  கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளன. ஆகவே, இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டாது மீன்பிடியில் ஈடுபடுவது, தேவையற்ற அனர்த்தங்களை தவிர்க்கும்” என, அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...