Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

வாகன இறக்குமதியில் சிக்கல்: ரூ. 2.5 கோடிக்கு மேல் விலை உயரவுள்ள 27 இருக்கை பஸ்!

T

The Leader Desk

ஜனவரி 29, 2025 • 2:18 AM

வாகன இறக்குமதியில் சிக்கல்: ரூ. 2.5 கோடிக்கு மேல் விலை உயரவுள்ள 27 இருக்கை பஸ்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மில்லியன் (இரண்டரை கோடி) ரூபாய்க்கே விற்பனை செய்யவேண்டி ஏற்படும் என்றும் ஜப்பான் லொறிகளின் விலையும் தற்போது அதிகரித்துள்ளதென்றும் வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • இதேவேளை, வாகன இறக்குமதிக்கு தடை விதித்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானியை இரத்து செய்து வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க நிதி அமைச்சு வர்த்தமானியொன்றை நேற்று வெளியிட்டிருந்தது.
  • குறித்த வர்த்தமானி தகவல்களின் படி 04 வகையான வாகனங்களுக்கு மட்டுமே இறக்குமதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மனகே தெரிவித்துள்ளார்.
  • குறிப்பாக பொதுப் போக்குவரத்துக்கான பஸ்கள், 10 – 16 சீட் கொண்ட வேன்கள், லொறி, டபல் கெப் ரக வாகனங்களை இறக்குமதி செய்ய மட்டுமே குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

2.5 மில்லியன் (இரண்டரை கோடி) ரூபாய்க்கே விற்பனை செய்யவேண்டி ஏற்படும் என்றும் ஜப்பான் லொறிகளின் விலையும் தற்போது அதிகரித்துள்ளதென்றும் வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டுள்ள போதிலும், வாகன இறக்குமதிக்கான வரிகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்படாததால், வாகனங்களை இறக்குமதி செய்வது இன்னும் சாத்தியமில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அரசாங்கத்தின் அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, வாகன விலைகளில் சிறிதளவு அதிகரிப்பு இருக்கும் என்று தெரிவித்தார்.

வாகனங்கள் மீதான வரிகள் தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், வாகன இறக்குமதியாளர்கள் நிதிப் பிரதியமைச்சருடன் இது குறித்து விவாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது நாட்டின் டொலர் கையிருப்பில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாகவும் கூறிய அமைச்சர், மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார்.

இதேவேளை, வாகன இறக்குமதிக்கு தடை விதித்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானியை இரத்து செய்து வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க நிதி அமைச்சு வர்த்தமானியொன்றை நேற்று வெளியிட்டிருந்தது.

குறித்த வர்த்தமானி தகவல்களின் படி 04 வகையான வாகனங்களுக்கு மட்டுமே இறக்குமதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மனகே தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பொதுப் போக்குவரத்துக்கான பஸ்கள், 10 – 16 சீட் கொண்ட வேன்கள், லொறி, டபல் கெப் ரக வாகனங்களை இறக்குமதி செய்ய மட்டுமே குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தனிப்பாவனைக்கான வாகனங்கள் இறக்குமதிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு மேலே உள்ள வாகன இறக்குமதிக்கு அமைவாக வரி அறவீடு குறித்த எந்த தகவல்களும் இல்லை என்றும் அதனையும் அரசு விரைவில் வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...