அல்-அக்ஸா பள்ளிவாசளில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் சமீபத்திய சட்டவிரோத மேற்குக் கரை வெளியேற்றங்கள் பற்றிய ஊடக அறிக்கை

இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தளமான ஜெருசலத்தில் உள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலில் ரமழான் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் கடந்த வாரம் நடத்திய மிருகத்தனமான தாக்குதல்களை பலஸ்தீன இலங்கை ஒற்றுமைக்கான செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. அதே நேரம் அருகிலுள்ள ஷேக் ஜர்ரா பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பலஸ்தீன குடும்பங்களுக்கு எதிராக வலுக்கட்டாயமாக மற்றும் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு வழிவகுப்பதற்காக சமீபத்திய சட்டவிரோத வெளியேற்ற முயற்சிகளை குழு கண்டிக்கிறது.

உலகளவில் ஒளிபரப்பப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் பலஸ்தீனிலிருந்து வந்த தகவல்களின் அடிப்படையிலும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரும் பொலிசாரும் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிவாசல் வளாகங்களுக்குள் கண்ணீர்ப்புகை, ஸ்டன் கையெறி குண்டுகளை வீசியதுடன் ரப்பர் தோட்டாக்களினால் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலினால் ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த 200 பலஸ்தீனிய வழிபாட்டாளர்கள் காயமடைந்தனர். இந்த மனித உரிமைகள் மற்றும் கலாச்சார அட்டூழியத்துக்கு எதிராக SLCSP குழு தனது அச்சத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்துகிறது. புனித பள்ளிவாசல் மற்றும் வழிபாட்டாளர்கள் மீது இஸ்ரேலி படைகள் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதல், கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனிய பிரதேசங்களில் அதன் குடிமக்களுக்கு எதிராக மேற்கொண்ட அரச மிலேச்சத்தனத்தின் தொடர்ச்சியாக நான்காம் நாள் நடைபெற்றது.

சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றத் திட்டம், குறிப்பாக இனரீதியாக இலக்கு வைக்கப்பட்ட வெளியேற்றக் கொள்கையின் இனப்படுகொலை மற்றும் இன அழிப்பு ஆகியன மனிதகுலத்துக்கு ஆபத்தானது.

இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டிக்கும் பணியில் உலக சமூகத்துடன் இணைந்துகொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் SLCSP செயற்குழு அழைப்பு விடுக்கின்றது. மேலும் பலஸ்தீனத்தை இஸ்ரேல் தொடர்ந்து நிறவெறி பாணியில் ஆக்கிரமிப்பதை எதிர்த்து இலங்கை மக்களின் சீற்றத்தை வெளிப்படுத்துகிறது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் தொடர்பாக சர்வதேச சட்டக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு முழுமையான மற்றும் தொடர்ச்சியான நுழைவை வழிபாட்டாளர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் பாரம்பரிய நடைமுறைக்கு ஏற்ப எளிதாக்க வேண்டும் என்றும் SLCSP வலியுறுத்துகின்றது.

தீர்க்கப்படாத இந்த காலனித்துவ நெருக்கடியில் பலஸ்தீனத்தின் காலனித்துவ மக்களுக்கு அதன் பொறுப்புகளை நிறைவேற்ற ஐக்கிய நாடுகள் சபையை SLCSP குழு கேட்டுக் கொள்கின்றது.

Bimal Ratnayaka                                     

M. Fawzer Farook

இணைத் தலைவர் - SLCSP      பொதுச்செயலர் - SLCS

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி