இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவல் அடுத்த செப்டம்பர் மாதம் வரையில் இதே முறையில் தொடர்ந்தால் 20,000 க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் ஏற்படும் என மதிப்பிட்டுள்ளதாக (The Institute for Health Metrics and Evaluation (IHME) – the University of Washington) எனும் அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

வொஷிங்டன் பல்கலைக்கழகம் கூறிய விடயத்தில் இலங்கை அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தெளிவான தீர்வு காணப்படாவிட்டால் இலங்கை ஒரு கொடிய சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்ட கொரோனா பற்றிய அறிக்கை மற்றும் இலங்கையின் தற்போதைய கொரோனா நிலைமை குறித்து மங்கள சமரவீர மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழகம் கொரோனாவின் தற்போதைய உலகளாவிய நிலைமை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோயால் உலகின் ஒவ்வொரு நாடும் எதிர்கொள்ளும் நிலைமையை இந்த அறிக்கை ஆராய்கிறது மற்றும் இலங்கை தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து அரசாங்கமும் அதிகாரிகளும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

வொஷிங்டன் பல்கலைக்கழக அறிக்கை பல சிக்கல்களை எடுத்துக்காட்டுகிறது, ஆனால் இலங்கையில் கொரோனா பரவுவது தொடர்ந்தால், 20,000 க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் அடுத்த செப்டம்பர் மாதத்திற்குள் அல்லது இன்னும் நான்கு மாதங்களுக்குள் ஏற்படலாம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள நாடு தயாராக இல்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது, இதுபோன்ற ஒரு கொடிய சூழ்நிலையை நிறுத்த அரசாங்கம் தாமதிக்காது என்று நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: (லங்காதீப)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி