Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

சீதுவ துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல்கள் வெளியாகின

T

The Leader Desk

டிசம்பர் 28, 2024 • 4:14 PM

சீதுவ துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல்கள் வெளியாகின   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சம்பவத்தில், 53 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
  • சீதுவ, லியனகேமுல்ல, வெலபடபார பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில், இன்று (28) மாலை 5:45 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
  • துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 73 வயதான வர்த்தகர், தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவரது மற்றைய மகன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
  • துப்பாக்கிதாரிகள், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
எழுத்து அளவு:

சம்பவத்தில், 53 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சீதுவ, லியனகேமுல்ல, வெலபடபார பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில், இன்று (28) மாலை 5:45 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அவர்கள் படுகாயமடைந்த நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்தக் குடும்பத்தின் மூத்த மகன் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 73 வயதான வர்த்தகர், தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவரது மற்றைய மகன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

துப்பாக்கிதாரிகள், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வந்த காரை, கட்டுநாயக்க - கோவின்ன பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு அருகில் வைத்து, எரித்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

T56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியே துப்பாக்கிதாரிகள் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சீதுவ துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல்கள் வெளியாகின | Tamil Leader | We Lead the Nation