Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

வவுனியாவில் அலுவலகம் அமைக்க காணி கோரும் தேசிய பாதுகாப்புப் பிரிவு

T

The Leader Desk

டிசம்பர் 28, 2024 • 5:25 AM

வவுனியாவில் அலுவலகம் அமைக்க காணி கோரும் தேசிய பாதுகாப்புப் பிரிவு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதற்கமைய, குறித்த அமைப்புக்களுக்கு வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பகுதி மற்றும் திருநாவற்குளம் பாரவூர்தி தரிப்பிடம் ஆகியவற்றை பிரித்து வழங்குவது தொடர்பாக கடந்த காலங்களில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களின் போது அனுமதி கோரப்பட்டிருந்தது.
  • மழைக் காலங்களில் அதன் நிலமை மேலும் மோசமடைவதுடன், பால் உற்பத்தியும் வீழ்ச்சியடையும் நிலை காணப்படுகின்றது.
  • எனினும், குறித்த காணி விடயத்தில் தேசிய புலனாய்வு அலுவலகத்தின் காணிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக, நேற்றையதினம் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

கோரப்பட்ட நிலையில், அது நிராகரிக்கப்பட்டுள்ளது.  

வவுனியா பிரதேச ஒருங்கினைப்பு குழுக் கூட்டம், ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் நேற்றையதினம் (27) இடம்பெற்றது.    

காணியற்ற அரச திணைக்களங்கள், தேசிய புலனாய்வு அலுவலகம் மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியன, தமக்கு நகரப்பகுதியில் காணி ஒதுக்கித்தருமாறு வவுனியா பிரதேச செயலகத்திடம் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கமைய, குறித்த அமைப்புக்களுக்கு வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பகுதி மற்றும் திருநாவற்குளம் பாரவூர்தி தரிப்பிடம் ஆகியவற்றை பிரித்து வழங்குவது தொடர்பாக கடந்த காலங்களில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களின் போது அனுமதி கோரப்பட்டிருந்தது.

எனினும், குறித்த காணி விடயத்தில் தேசிய புலனாய்வு அலுவலகத்தின் காணிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக, நேற்றையதினம் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, வவுனியாவில் பெரும் காடுகளில் ஏக்கர் கணக்கான காணிகளில் இராணுவம் முகாம் அமைத்துள்ள நிலையில், கால்நடைகளுக்கான மேச்சல் தரை அமைப்பதில் மாத்திரம் திணைக்களங்கள் அக்கறையில்லாமல் செயற்படுவதாக வவுனியா ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

வவுனியாவில் மேச்சல் தரை இல்லாமல் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் இதன்போது கவலை தெரிவிக்கப்பட்டது.

மழைக் காலங்களில் அதன் நிலமை மேலும் மோசமடைவதுடன், பால் உற்பத்தியும் வீழ்ச்சியடையும் நிலை காணப்படுகின்றது. இராணுவம் பெரும் காடுகளில் பல ஏக்கர்கணக்கான காணிகளை பிடித்து முகாம் அமைத்துள்ளது.

ஆனால், நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிக்கும் கால்நடைகளுக்கு, மேச்சல் தரை வழங்குவதில் அதிகாரிகள் பின்னடிப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தினர்.

குளத்தின் அலைகரைப்பகுதிகளில் மேச்சல் தரை அமைப்பது தொடர்பாக ஆராயுமாறும் அரச காணிகளை அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் நபர்களிடம் இருந்து அந்த காணிகளை பறித்து மேச்சல் தரை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் இதன்போது தெரிவித்திருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...