Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு

T

The Leader Desk

ஜனவரி 28, 2025 • 5:02 AM

சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
  • ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக 580 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • குறித்த காலகட்டத்தில், சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 8,746 முறைப்பாடுகள் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன.
  • இதில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகளாக 2,746 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ளது.
எழுத்து அளவு:

ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக 580 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலகட்டத்தில், சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 8,746 முறைப்பாடுகள் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன.

இதில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகளாக 2,746 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக  கிடைக்கப்பெற்றுள்ளது.

சிறுவர்கள் மீதான சித்திரவதை தொடர்பாக 1,950 முறைப்பாடுகளும், சிறுவர்கள் யாசகம் பெறுவது  தொடர்பாக 229 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

பாலியல் வன்கொடுமை தொடர்பாக 42 முறைப்பாடுகளும், பாலியல் செயல்களுக்கு சிறுவர்களை தூண்டுவது தொடர்பாக 25 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளது.

இதற்கிடையில், கடந்த ஆண்டில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக 14 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன, மேலும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல்கள் தொடர்பாக 151 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

2024ஆம் ஆண்டில் தற்கொலை முயற்சி தொடர்பாக 18 முறைப்பாடுகளும், போதைப்பொருள் பழக்கம் தொடர்பாக 120 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வயது குறைந்த கர்ப்பங்கள் தொடர்பாக 53 முறைப்பாடுகளும், பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் தொடர்பாக 39 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...