Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல் தெரிவிப்பு

T

The Leader Desk

டிசம்பர் 27, 2024 • 10:54 AM

மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல் தெரிவிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.
  • முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக அவர் செயல்படுத்திய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய கிராமிய வேலைவாய்ப்பு செயல்திட்டம் போன்ற மாற்றத்துக்கான திட்டங்கள் என்பன சமத்துவம், தலையீடு தொடர்பிலான அவரது உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.
  • அந்த இரங்கல் செய்தி வருமாறு, நான் எனது சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் இந்தியக் குடியரசுக்கும், கலாநிதி.
எழுத்து அளவு:

தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்த இரங்கல் செய்தி வருமாறு,

நான் எனது சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் இந்தியக் குடியரசுக்கும், கலாநிதி. மன்மோகன் சிங் அவர்களின் குடும்பத்தாருக்கும், உலகெங்கிலும் அவர் மீதான பற்றை வௌிப்படுத்தும் எண்ணற்றவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்

தெரிவிக்கிறேன்.

தொலைநோக்கு கொண்ட தலைவரான கலாநிதி மன்மோகன் சிங்கின் வழிகாட்டல் இந்தியாவிற்குள் மாத்திரம் மட்டுப்படவில்லை. 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக அவர் செயல்படுத்திய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய கிராமிய  வேலைவாய்ப்பு  செயல்திட்டம் போன்ற மாற்றத்துக்கான திட்டங்கள் என்பன சமத்துவம், தலையீடு தொடர்பிலான அவரது உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.

சர்வதேச ஒத்துழைப்புக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய காலாநிதி மன்மோகன் சிங்,  நீண்டகால கூட்டுறவு கூட்டணிகளை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியதுடன் BRICS போன்ற அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

இந்தியா, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் மூலம் அவரது சிறந்த இராஜதந்திரம் தெரிகிறது. அவரது தன்னடக்கம், அறிவாற்றல் மற்றும் அரச சேவைக்கான அர்ப்பணிப்பு ஆகியன நிச்சயமாக எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நிலையான முன்மாதிரியாகவும் ஊக்குவிப்பாகவும் அமையும். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

471647439_1178521133644114_6303389754774965421_n.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...