Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

மின் கட்டணத் திருத்தம்: இன்று முதல் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு

T

The Leader Desk

டிசம்பர் 27, 2024 • 3:54 AM

மின் கட்டணத் திருத்தம்: இன்று முதல் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளது.
  • புத்தாண்டின் முதல் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பராமரிக்க வேண்டும் என்று சமீபத்தில் மின்சார சபை முன்மொழிந்திருந்தது.
  • இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பதில் யோசனைகளை முன்வைத்து, ​​மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.
  • இந்த யோசனைகள் தொடர்பில் கடந்த 17ஆம் திகதி முதல் பொது மக்களிடமிருந்து எழுத்துமூலமான கருத்துக்கள் பெறப்பட்டதுடன், இன்று முதல் ஜனவரி 10ஆம் திகதி வரை 9 மாகாணங்களையும் உள்ளடக்கி வாய்மொழி கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது அமர்வு இன்று மத்திய மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் இது இடம்பெறவுள்ளது.

புத்தாண்டின் முதல் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பராமரிக்க வேண்டும் என்று சமீபத்தில் மின்சார சபை முன்மொழிந்திருந்தது.

இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பதில் யோசனைகளை முன்வைத்து, ​​மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

இந்த யோசனைகள் தொடர்பில் கடந்த 17ஆம் திகதி முதல் பொது மக்களிடமிருந்து எழுத்துமூலமான கருத்துக்கள் பெறப்பட்டதுடன், இன்று முதல் ஜனவரி 10ஆம் திகதி வரை 9 மாகாணங்களையும் உள்ளடக்கி வாய்மொழி கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொலைபேசி இலக்கமான 0772 943 193க்கு தொடர்பு கொண்டு பதிவு செய்ய முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாய்மொழி மூலமும் எழுத்து மூலமும் கருத்துகளைப் பெற்ற பின்னர் ஜனவரி 17ஆம் திகதி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர்

ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...