Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்?

T

The Leader Desk

ஜனவரி 27, 2025 • 1:37 PM

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசியலமைப்புக்கு முரணானவை என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம், தனது ரகசிய தீர்ப்பை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற சபாநாயகருக்கும் அனுப்புவதாக இன்று (27) அறிவித்துள்ளது.
  • வழக்கு முடிவு செய்யப்படும் நேரத்தில், நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிடும்.
  • வேட்புமனுக்கள் கோரப்பட்ட பின்னர், தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, டிசம்பர் 20 அன்று, மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரரிடம் கூறியிருந்தார்.
  • நாடு முழுவதும் 325 உள்ளூராட்சிமன்ற நிறுவனங்கள் உள்ளன.
எழுத்து அளவு:

அரசியலமைப்புக்கு முரணானவை என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம், தனது ரகசிய தீர்ப்பை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற சபாநாயகருக்கும் அனுப்புவதாக இன்று (27) அறிவித்துள்ளது.

இரண்டு நாட்கள் நீடித்த வழக்கு விசாரணையை நிறைவுறுத்தி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த மனுக்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர்  உள்ளிட்ட நான்கு தரப்பினர் தாக்கல் செய்திருந்தனர்.

இதேவேளை, ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில், உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்று தான் நம்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகிறார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலத்தை, அனைத்துக் கட்சிகளும் கூட்டாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

"அனைத்து கட்சிகளின் தலைவர்களது ஒப்புதலுடன், உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான சட்டமூலத்தை, அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. பல தரப்பினர் தற்போது நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், இது தேர்தல்களை நடத்துவதற்கு எந்தவொரு குறிப்பிட்ட தடையையும் ஏற்படுத்தாது என்று நாங்கள் நம்புகிறோம். வழக்கு முடிவு செய்யப்படும் நேரத்தில், நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிடும். ஆனால், நீதிமன்றத்திற்கு அதற்குக் குறைந்த நாட்களே உள்ளன. எனவே, ஏப்ரல் இரண்டாவது வாரம் அல்லது நான்காவது வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று நம்புகிறோம். ஏனென்றால், இந்தப் பிரதேச சபைத் தேர்தல்களை, வடக்கு மாகாணத்திலும் நாடு முழுவதும் விரைவில் நடத்தவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

வேட்புமனுக்கள் கோரப்பட்ட பின்னர், தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, டிசம்பர் 20 அன்று, மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரரிடம்  கூறியிருந்தார்.

இதன்படி, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்த, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 325 உள்ளூராட்சிமன்ற நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 271 பிரதேச சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 23 நகராட்சி மன்றங்கள் அடங்குகின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...