நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்வதற்கான சதி உட்பட ஆயுத வர்த்தக கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டதாக கூறப்படும் சஞ்சீவ சமரரத்ன அல்லது (கணேமுல்ல சஞ்சீவ) உட்பட 11 பேரை விடுவிக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது, அவர் பல கடுமையான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட பாதாள உலக கும்பலின் முக்கிய உறுப்பினராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு தலைமை மாஜிஸ்திரேட் புத்த ஸ்ரீ ராகல முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை படுகொலை செய்ய யுத்தத்தின் போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் புதைக்கப்பட்ட கிளைமோர் குண்டுகள் மற்றும் டி 56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை சட்டவிரோதமாக் கொண்டு வந்து கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் உள்ள பாதாள உலக கும்பல் உறுப்பினர்களுக்கு விற்றுள்ளதாகவும் அவர்கள் அவற்றை வாங்கியதாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எவ்வாறாயினும், 11 சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாகவும், மற்ற நான்கு சந்தேக நபர்கள் மீது எதிர்காலத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதவான் கூறினார்.

வத்தளையில் வைத்து துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் LTTE உறுப்பினரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கொழும்பு குற்றப்பிரிவு கணேமுல்ல சஞ்சீவ உள்ளிட்ட 15 பேரையும் கைது செய்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக தடுப்புக்காவலில் வைத்திருந்தது.

கைது செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதன் நிமித்தம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி