Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

2024இல் 2 மில்லியனைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை!

T

The Leader Desk

டிசம்பர் 26, 2024 • 10:38 AM

2024இல் 2 மில்லியனைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
  • கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை கலாசார ரீதியாக வரவேற்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்தார்.
  • ஆம் ஆண்டின் 2 மில்லியனைப் பூர்த்தி செய்யும் சுற்றுலாப் பயணி, இன்று (26) காலை 10.49 மணியளவில், பாங்காக்கில் இருந்து UL 403 விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
  • ஆண்டுக்கு 20 இலட்சத்தைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை இது நான்காவது முறையாகும்.
எழுத்து அளவு:

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை கலாசார ரீதியாக வரவேற்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டின் 2 மில்லியனைப் பூர்த்தி செய்யும் சுற்றுலாப் பயணி, இன்று (26) காலை 10.49 மணியளவில், பாங்காக்கில் இருந்து UL 403 விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் புத்திக ஹேவாவசம், சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் கலாநிதி ருவன் ரணசிங்க, அந்த சுற்றுலாப் பயணியை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், விமான நிலையத்தின் Silk Route Loungeஇல், சுற்றுலா பயணிகளை வரவேற்கும் சிறப்பு விழாவையும் ஏற்பாடு செய்திருந்தது.

ஆண்டுக்கு 20 இலட்சத்தைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் வருகை இது நான்காவது முறையாகும். இதற்கு முன்பு, 2016, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் மட்டும் 20 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

2018க்குப் பிறகு, இந்த ஆண்டு, ஒரே ஆண்டில் அதிக சுற்றுலாப் பயணிகளைப் பதிவு செய்துள்ளது. டிசம்பர் முதல் 26 நாட்களில் மாத்திரம், 1,95,127 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். மேலும், டிசம்பர் 31 நள்ளிரவுக்குள் 250,000 சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பெப்ரவரி 2019இல் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் 250,000 ஐ தாண்டியது.

ஈஸ்டர் தாக்குதல், கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்நாட்டின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் ஒன்லைன் விசா பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதைத் தவிர, பயணச் சேவை வழங்குநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க, தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கடந்த 3 மாதங்களில் மட்டும் 515,192 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். புதிய அரசாங்கம் 39 நாடுகளுக்கு இலவச விசா வசதிகளை வழங்கவும் ஏற்பாடு செய்தது. 2025ஆம் ஆண்டு 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டிற்குக் கொண்டுவரும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் டிசம்பர் 22ஆம் திகதி வரை, 1,972,000 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர். அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள், இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மன் மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து அதிகளவில் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...