Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

70 வயது பெண்ணுக்கு விஷ ஊசி ஏற்றிக் கொலை: சந்தேகநபருக்கு மறியல்

T

The Leader Desk

டிசம்பர் 26, 2024 • 3:12 AM

70 வயது பெண்ணுக்கு விஷ ஊசி ஏற்றிக் கொலை: சந்தேகநபருக்கு மறியல்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திக்வெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
  • திக்வெல்ல - வத்தேகம தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 70 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவருக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறி, மாத்தறை - பதிகம வைத்தியசாலையில் டிசம்பர் 20ஆம் திகதி பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • பின்னர் அவர், மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு 4 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (24) மாலை உயிரிழந்துள்ளார்.
  • சம்பவம் தொடர்பில் திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ​​குறித்த வீட்டிற்கு அருகில் இருந்த சிசிடிவி கெமராவில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டன.
எழுத்து அளவு:

திக்வெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணித் தகராறு தொடர்பான நீதிமன்ற வழக்கு இடம்பெறும் பின்னணியில், இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

திக்வெல்ல - வத்தேகம தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 70 வயதுடைய திருமணமாகாத பெண்ணொருவருக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக கூறி, மாத்தறை - பதிகம வைத்தியசாலையில் டிசம்பர் 20ஆம் திகதி பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர், மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு 4 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (24) மாலை உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்குள் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர், அப்பெண்ணுக்கு விஷ ஊசியை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றதாக, அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ​​குறித்த வீட்டிற்கு அருகில் இருந்த சிசிடிவி கெமராவில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டன. அதன்படி, சம்பந்தப்பட்ட பெண்ணைச் சந்திப்பதற்காக ஒருவர் வீட்டிற்குள் நுழைவது, அந்தக் கெமராவில் பதிவாகியுள்ளது.

சில நிமிடங்களுக்குப் பிறகு, அடையாளம் தெரியாத நபரும் சம்பந்தப்பட்ட பெண்ணும் பீதியுடன் வீட்டை விட்டு வெளியே வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகளில், பெண்ணின் கழுத்தைப் பிடித்து, வீதியை கடந்து அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு ஓடுவதும், விஷ ஊசியை ஏற்றியதாக சந்தேகிக்கப்படும் நபர், மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதும் தெரிகிறது.

சம்பவம் தொடர்பில் வினவியபோது, ​​குறித்த பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தியதாக கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டு, நேற்றைய தினம் (25) மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் இரத்த மாதிரிகள் சட்ட வைத்திய அறிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...