Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இன்று இந்தியாவின் 76ஆவது குடியரசு தினம்

T

The Leader Desk

ஜனவரி 26, 2025 • 4:52 AM

இன்று இந்தியாவின் 76ஆவது குடியரசு தினம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • இந்த ஜனவரி 26ஆம் திகதி, இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தைக் குறிக்கிறது.
  • இருப்பினும், 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி தான் இந்திய அரசியலமைப்பு முதன் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் திகதி அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
எழுத்து அளவு:

ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது.

இந்த ஜனவரி 26ஆம் திகதி, இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள், குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

இருப்பினும், 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி தான் இந்திய அரசியலமைப்பு முதன் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் திகதி அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

இப்படியாக நமது குடியரசு தினத்திற்கு பின்னால், அரசியலமைப்பு சபை, அண்ணல் அம்பேத்கர், இந்திய பிரிவினை, காங்கிரஸ் கட்சி மற்றும் பூர்ணா ஸ்வராஜ் தீர்மானம் என பல காரணங்கள் உள்ளன. அவைகளை பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.

இந்திய குடியரசு தினத்தின் வரலாறு:

அரசியலமைப்பு சபை என்பது இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இந்த அமைப்பு, அதன் முதல் அமர்வை டிசம்பர் 9, 1946 அன்று நடத்தியது. இதில் 9 பெண்கள் உட்பட 207 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நினைவூட்டும் வண்ணம், ஆரம்ப காலத்தில், சட்டமன்றத்தில் 389 உறுப்பினர்கள் இருந்தனர், ஆனால் சுதந்திரம் பெற்ற பிறகு மற்றும் இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு, ஆகஸ்ட் 15, 1947இல், அந்த எண்ணிக்கை 299ஆக குறைக்கப்பட்டது.

இந்த அரசியல் அமைப்பு சபைக்கு இந்திய அரசியலமைப்பை உருவாக்க மூன்று ஆண்டுகள் ஆனது. மேலும் அரசியல் அமைப்பின் ஆரம்ப பதிப்பை (வரைவு) உருவாக்கவே இவர்கள் 114 நாட்களுக்கு மேல் செலவழித்தனர்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையிலான இந்த வரைவுக் குழு, அரசியல் நிர்ணய சபையின் 17க்கும் மேற்பட்ட குழுக்களில் ஒன்றாகும். இந்த வரைவுக் குழுவின் பிரதான பணி இந்தியாவிற்கான அரசியலமைப்பு வரைவை தயாரிப்பதே ஆகும்.

இந்தக் குழு, அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி விவாதிக்கும் போதும் மற்றும் ஆலோசிக்கும் போதும், ​​கிட்டத்தட்ட 7,600 திருத்தங்களை முன்வைத்தது மற்றும் சுமார் 2,400 திருத்தங்களை நீக்கியது.

இந்த அரசியல் அமைப்பு சபையின் கடைசி அமர்வு நவம்பர் 26, 1949 அன்று முடிவடைந்தது, அப்போது தான் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 26, 1950 இல் 284 உறுப்பினர்களின் கையொப்பத்தைத் தொடர்ந்து இது நடைமுறைக்கு வந்தது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இன்று இந்தியாவின் 76ஆவது குடியரசு தினம் | Tamil Leader | We Lead the Nation