Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

யாழில் 17 சுயேட்சைக் குழுக்கள் இணைந்து ‘ஐக்கிய தமிழ் ஒன்றியம்’ அங்குரார்ப்பணம்

T

The Leader Desk

ஜனவரி 26, 2025 • 4:33 AM

யாழில் 17 சுயேட்சைக் குழுக்கள் இணைந்து ‘ஐக்கிய தமிழ் ஒன்றியம்’ அங்குரார்ப்பணம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒன்றிணைத்து ஐக்கிய தமிழர் ஒன்றியம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
  • இந்நிகழ்வு, நேற்றைய தினம் (25) யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
  • அங்குராப்பண நிகழ்வு தொடர்பில் சுயேச்சை குழு 12இன் முதன்மை வேட்பாளர் சிறீந்திரன் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய தலைமைகளின் அதிர்ச்சி நிலை காரணமாக தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவானது.
  • இந்நிலை எதிர்காலத்தில் தவிர்க்கப்படுவதற்காக கடந்த பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சை குழுக்களாக போட்டியிட்ட 17 சுயேச்சை குழுக்களின் முதன்மை வேட்பாளர்கள் ஒன்றிணைந்து ஐக்கிய தமிழர் ஒன்றியமாக அங்குராப்பணம் செய்துள்ளோம்.
எழுத்து அளவு:

ஒன்றிணைத்து ஐக்கிய தமிழர் ஒன்றியம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வு, நேற்றைய தினம் (25) யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

அங்குராப்பண நிகழ்வு தொடர்பில் சுயேச்சை குழு 12இன் முதன்மை வேட்பாளர் சிறீந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய தலைமைகளின் அதிர்ச்சி நிலை காரணமாக தென்னிலங்கை கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவானது.

இந்நிலை எதிர்காலத்தில் தவிர்க்கப்படுவதற்காக கடந்த பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சை குழுக்களாக போட்டியிட்ட 17 சுயேச்சை குழுக்களின் முதன்மை வேட்பாளர்கள் ஒன்றிணைந்து ஐக்கிய தமிழர் ஒன்றியமாக அங்குராப்பணம் செய்துள்ளோம்.

தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார இலக்குகளை முன்வைத்து எமது பயணம் முன்னோக்கிக் செல்லும் என்றார்.

சுயேட்சை குழு  15 இல் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர் செந்தில்மதி கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் எதிர்பார்த்த இலக்குகளை தமிழ் தேசிய அரசியல்வாதிகள் செய்யவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு. இதன் காரணமாக சுயேச்சை குழுக்களாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தரப்புகளை ஒன்றிணைத்து தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்காலத்தில் சிதறடிக்காமல் மக்கள் பலத்தினை காட்டுவதற்காக ஒன்றிணைந்துள்ளோம்.

யாழ். தேர்தல் தொகுதியில் முதற்கட்டமாக 17 சுயேச்சை குழுக்களை ஒன்றிணைத்து எமது பயணத்தை ஆரம்பித்து உள்ள நிலையில் வடமாகாணம் கிழக்கு மாகாணம், மலைகயம் மற்றும் கொழும்பை ஒன்றிணைத்து ஐக்கிய தமிழர் ஒன்றியமாக எமது செயற்பாடுகள் விரிவுபடுத்த உள்ளோம்

எமது இந்த அமைப்பில் இணைந்து பயணிக்க விரும்புபவர்கள் இல 1793 கே.கே.எஸ் வீதி, கோண்டாவில் மேற்கு கோண்டாவில் என்ற முகவரியில் அமைந்துள்ள எமது அலுவலகத்தில் தொடர்புகொள்ள முடியும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

யாழில் 17 சுயேட்சைக் குழுக்கள் இணைந்து ‘ஐக்கிய தமிழ் ஒன்றியம்’ அங்குரார்ப்பணம் | Tamil Leader | We Lead the Nation