ஆட்டோ ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகியதில், மூன்று பெண்கள் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் ஹக்கல என்ற இடத்தில் இன்று (01) இடம்பெற்றுள்ளது.

எல்ல பகுதியிலிருந்து நுவரெலியாவிற்கு சென்று, மீளவும் எல்ல பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்த ஆட்டோ, எதிர் திசையில் வந்த கனரக லொரியொன்றுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் 51,52,20 வயதுகளுடைய மூன்று பெண்களே பலியானவர்களாவார். விபத்தில் காயமடைந்த நபரொருவர் நுவரெலியா அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டோவில் பயணித்தவர்களே பலியானவர்களாவர். இவ் ஆட்டோவில் வந்த மற்றவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வெலிமடை பொலிசார் மேற்படி விபத்துக்குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் விபத்துக்கான கனரக லொரியின் சாரதியையும் வெலிமடை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி