Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

சுற்றுலாத்துறையை இலக்கு வைத்து புதிய ரயில் சேவைகள்

T

The Leader Desk

ஜனவரி 25, 2025 • 4:08 PM

சுற்றுலாத்துறையை இலக்கு வைத்து புதிய ரயில் சேவைகள்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
  • எல்ல - ஒடிஸி - கெண்டி ரயில் சேவை, பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டிக்கும் தெமோதரவுக்கும் இடையில் இயக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.
  • எல்ல ஒடிஸி - நானுஓயா ரயில் சேவை, பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல் நானுஓயா மற்றும் பதுளைக்கு இடையில் இயக்கப்படவுள்ளது.
  • கொழும்புக்கும் பதுளைக்கும் இடையிலான எல்லா ஒடிஸி - கொழும்பு ரயில் சேவையில் மேலதிக ரயில் பயணத்தை பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொழும்பிலிருந்தும், பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பதுளையிலிருந்தும் புறப்படும்.
எழுத்து அளவு:

புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறிப்பாக மலையகப் மார்க்கம், ரயில் சுற்றுலாப் பயணிகளிடையே, பிரபலமாகவும், ஈர்ப்பு அதிகமாகவும் இருப்பதுடன் ரயில் சேவைக்கான அதிக கேள்வி இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே பொது  முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

அதன்படி, பெப்ரவரி மாதம் முதல் எல்ல - ஒடிஸி - கெண்டி மற்றும் எல்ல ஓடிஸி - நானு ஓயா ஆகிய இரண்டு புதிய ரயில்கள் சேவைகளை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதுடன்,  எல்ல ஒடிஸி - கொழும்பு ரயில் சேவையில் மேலதிக பயணத்தை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எல்ல - ஒடிஸி - கெண்டி ரயில் சேவை, பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டிக்கும் தெமோதரவுக்கும் இடையில் இயக்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.

எல்ல ஒடிஸி - நானுஓயா ரயில் சேவை, பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல் நானுஓயா மற்றும் பதுளைக்கு இடையில் இயக்கப்படவுள்ளது.

கொழும்புக்கும் பதுளைக்கும் இடையிலான எல்லா ஒடிஸி - கொழும்பு ரயில் சேவையில் மேலதிக ரயில் பயணத்தை பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொழும்பிலிருந்தும், பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பதுளையிலிருந்தும் புறப்படும்.

மேலும், ஜனவரி 31ஆம் திகதி முதல் கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு நேர அஞ்சல் ரயில் சேவையும் தினசரி சேவையில் சேர்க்கப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...