ட்டைல் மற்றும் ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்து, அரிசியை இலங்கையில் உற்பத்தி செய்வதா அல்லது அரிசியை இறக்குமதி செய்து, ட்டைல் உற்பத்தியை இலங்கை செய்வதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும் என்று ட்டைல் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ட்டைல் உற்பத்தியை அதிகரிப்பதால் அதன் உற்பத்தி செலவு பல மடங்காக இருக்கும் என்றும், இவற்றுக்கான மூலப் பொருட்களுக்காக வயல்களையே தோண்ட நேரிடம் என்றும் குறுித்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால், விவசாயத்தை கைவிட நேரிடும் என்பதுடன் சுற்றுச்சுழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், வயல் காணிகள் குறித்த சட்டமூலம் வலுவாக இருப்பதால், தேவையான மூலப் பொருட்களுக்காக அதிக பணத்தை செலவிட நேரிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், ட்டைல் உற்பத்திகளின் போது சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ட்டைல் எனப்படும் தரை ஓடுகள், ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளைத் திருத்துவதற்கு அமைச்சரவை முடிவு செய்திருந்தாலும், இது நுகர்வோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ட்டைல் மற்றும் ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்யும் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்திய போதிலும், ட்டைல் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் மீதான வரி ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பு சதுர அடிக்கான ட்டைல் 100 ரூபாவாக இருந்த வரி புதிய திருத்தப்பட்ட வரியின் கீழ் சதுர அடிக்கு 480 ரூபாவாக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

சிலர் உள்நாட்டில் உற்பத்தி செய்கிறார்கள், மற்றவர்கள் தொழில்துறையை விட்டு வெளியேறுகிறார்கள். உள்ளூர் ட்டைல் உற்பத்தி 40% - 45% தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். இதில் உற்பத்தி செலவில் சுமார் 50% வீதமானவற்றை மூலப்பொருட்கள் இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

சீனாவில் ட்டைல் தயாரிப்பில் ஈடுபடும் நகரங்களைச் சேர்ந்த மக்கள், வாகனம் நீலமாக இருப்பதை வேறு பிரதேசங்களிலேயே காண்கின்றனர். அவ்வளவு சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

ட்டைல் மற்றும் ஆடம்பர பொருட்ள் இறக்குமதியாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் மேலும் கூறுகையில்,

"இறக்குமதி செய்யப்பட்ட ட்டைல் மற்றும் பீங்கான் பொருட்களை உற்பத்தி செய்யும் போது நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் சுற்றுச்சூழல் மாசுபடுபவதாகும். அத்துடன், தயாரிப்புக்கள் சுடப்படும் போது மிகப் பெரிய வளிமாசடைதல் நடக்கிறது. தொடர்ந்து தொழிற்பாடு நடக்கிறது. ஒரு நாளைக்கு 24 மணிநேரமும், வருடத்திற்கு 365 நாட்களும். அதன் அளவை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை குறித்து யோசித்துப் பார்க்க வேண்டும். பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களுக்கு சென்றுபார்த்தால் நாம் சொல்வது புரியும். சீனாவில் இவ்வாறான நகரங்களுக்குச் சென்றால் அங்கு நீல வானத்தைப் பார்க்க முடியாது. எனவே எங்களைப் போன்ற ஒரு சிறிய நாட்டில் என்ன நடக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது சுலபமானதல்ல!

அத்துடன் இந்த பொருட்களைத் தயாரிப்பதற்கான மூலப்பொருளான களிமண் நெல் வயல்களில் இருந்தே வெட்டியெடுக்கப்பட வேண்டும். அல்லது தெற்கில் உள்ள அக்குரெஸ்ஸ போன்ற பிரதேசங்களில் உள்ள தேயிலை தோட்டங்களைத் தோண்ட வேண்டும். அங்கேயே இதற்கான மூலப் பொருட்கள் கிடைக்கின்றன. கைவிடப்பட்ட நெல் வயல்களைத் தோண்டினாலும் எவ்வளவு தான் தோண்டி எடுப்பது என்பதை சிந்திக்க வேண்டும். தேயிலை நிலங்களை இவ்வாறு தோண்டி எடுத்தால் அதன்பின்னர் அந்த நிலங்களுக்கு என்ன நடக்கும். இறக்குமதி கட்டுப்பாடுகள் மூலம் நன்மையை விட தீமையே அதிகமாக இருக்கிறது. இதன் உற்பத்திகளின் போது ஏராளமான தீமைகள் ஏற்படுகின்றன. இவை குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும். ட்டைல்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி, அவற்றை இங்கு உற்பத்தி செய்து அரிசி இறக்குமதி செய்ய வேண்டுமா என்பதையும் சிந்திக்க வேண்டும். அத்துடன், அளவிடமுடியாத சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும்.

உற்பத்தி போதுமானதாக இல்லாவிட்டால், விலைகள் உயரும். இலங்கையின் பொருளாதார நலனுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். வழங்கப்பட்டுள்ள வாய்ப்பிற்குள் ட்டைல்கள் மற்றும் ஆடம்பர பொருட்கள் அதிகபட்ச சலுகை விலையில் விற்பனை செய்யவே எதிர்பார்க்கிறோம். எனவே. இதற்கான நல்லதொரு தீர்வை எதிர்பார்பார்க்கிறோம்.'' என்று குறித்த இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ட்டைல் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியை இலகுவானதல்ல!

இதற்கிடையில், நுகர்வோர் சார்பாகவும், நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில்துறையில் ஈடுபடுவோரின் சார்பாக அரசாங்கத்தின் புதிய திருத்த கட்டுப்பாடுகளுக்கு சங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்று குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

பீங்கான் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கான தற்காலிக தடை அண்மைக்காலமாக தொழில்துறையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இறக்குமதியாளர்கள் மட்டுமல்லாமல் வர்த்தகர்களும், கட்டிடத் தொழிலாளர்களும் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு 12 பில்லியன் வரி வருமானம்!

பீங்கான் இறக்குமதியாளர்கள், சுமார் 300 உறுப்பினர்களைக் கொண்ட சங்கமாகும். ஆண்டுக்கு சுமார் 12 பில்லியன் ரூபா பணத்தை வரியாக அரசாங்கத்திற்கு செலுத்துகிறது. மற்றும் சுமார் 30 ஆண்டுகளுக்கு சுமார் 100,000 வேலை வாய்ப்புக்களை வழங்கி வருகிறது என்றும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

தங்கள் தொழில் சுமார் 2,000 சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளது என்றும் இதனை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்டைல் மற்றும் ஆடம்பர பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம், தற்போதுள்ள கட்டுப்பாடுகளுக்குள் செயல்படுவது கடினம் என்று தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி