ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல் பற்றி தாம் எதுவும் அறிந்திருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

நாடாளுமன்றில் இன்று காலை உரையாற்றிய போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தாக்குதல் பற்றிய விபரங்கள் கிடைக்கப் பெற்றிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தாக்குதல் சம்பவமொன்று இடம்பெறும் என அறிந்திருந்தால் தாம் உடனடியாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி, தேவாலயங்களுக்கு பாதுகாப்பு வழங்கியிருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் சந்தேக நபர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியிருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலின் பின்னர் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர் ஒருவர் போலிப் பிரச்சாரம் செய்ததாகவும் அதனை மக்கள் நம்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் போதைப் பொருளை ஒழிக்கவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாதிகள் மீளவும் இவ்வாறான தாக்குதல்களை நடத்த மாட்டார்கள் என எவராலும் கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக அராசங்கம் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி