கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா தடை விதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
தற்போது உலகம் முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, 'வேக்சின் மைத்ரி' என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு வெளிநாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகின்றது.
மேலும், ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தடுப்பூசிகளுக்கான உள்நாட்டு தேவை வெகுவாக அதிகரிக்கும் என்பதால் கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை இந்திய மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. நட்பு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.