திருகோணமலை சிவன் கோயிலின் முன்றலில் முன்னெடுக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம், நேற்று (23) ஒன்பதாவது நாளுடன் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது. 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் கோரிக்கைகளையும் அரசியல் கைதிகளின்
விடுதலையும் தமிழ் மக்களின் சம உரிமைகளையும் சர்வதேசம் கவனத்தில்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான  பிரேரனை நிறைவேற்றப்பட்டதால், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் திருகோணமலை மாவட்டத் தலைவி திருமதி நா.ஆஷா மற்றும் திருமதி இரா.கோசலாதேவி ஆகியோர் உட்பட உண்ணா விரதம் இருந்தோர் இளநீர் பருகி, உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி