நூலகத்திலிருந்து இரவல் வாங்கிய புத்தகத்தை 63ஆண்டுகள் கழித்துத் திருப்பிக் கொடுத்த சம்பவம் ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. 

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தைச் சேர்ந்த பெட்டி டயமண்ட் என்ற பெண்மணியே இவ்வாறு புத்தகத்தை திருப்பிக்கொடுத்துள்ளார். அவர் கூடவே 500டொலர் நன்கொடையையும் குவீன்ஸ் பொது நூலகத்திற்கு அனுப்பியுள்ளார். 

புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய திகதி கடந்து விட்டதால், அதை நூலகத்திற்குச் சென்று திருப்பி கொடுக்கக் கூச்சமாய் இருந்ததாக அவர் தி நியூயோர்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். 

'ஓல் போல்' என்ற புத்தகத்தை அவர் 1957ஆம் ஆண்டில், இரவல் வாங்கினார். அப்போது அவருக்கு 10வயது. காலப்போக்கில் அந்தப் புத்தகத்தைப் பற்றி அவர் மறந்துவிட்டார். அது கண்ணில் பட்டபோது வீசவும் மனமில்லை என்று டயமண்ட் தெரிவித்தார். 

ஆனால், அவர் இறுதியாக தமது 74ஆம் வயதில், அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க முடிவெடுத்ததாக தி நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது. 

தாமதமாகப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்ததற்கான கட்டணத்தை அந்த நன்கொடை ஈடுகட்டிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.   

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி