Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற விவகாரத்தில் பொலிஸ் முறைப்பாடு

T

The Leader Desk

டிசம்பர் 24, 2024 • 10:12 AM

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற விவகாரத்தில் பொலிஸ் முறைப்பாடு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சர்களுக்கு எதிராக “பொது பணத்தை பாதுகாக்கும் சட்டத்தரணிகள்” அமைப்பு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
  • ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்கள் அந்த பணத்தை பெறுவதற்கான தகுதிகளை உண்மையில் பூர்த்தி செய்தார்களா என்ற பிரச்சினை எழுந்துள்ளது.
  • குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தவறான தகவல்களை சமர்ப்பித்து ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்றிருக்க வேண்டும் என சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எழுத்து அளவு:

அமைச்சர்களுக்கு எதிராக “பொது பணத்தை பாதுகாக்கும் சட்டத்தரணிகள்” அமைப்பு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தவறான தகவல்களை சமர்ப்பித்து ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்றிருக்க வேண்டும் என சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சட்டத்தரணிகள், பணம் கோரும் நபரின் மொத்த மாதாந்த வருமானம் குறைவாக இருந்தால் மட்டுமே ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் விடுவிக்கப்பட வேண்டும் என்றனர்.

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்கள் அந்த பணத்தை பெறுவதற்கான தகுதிகளை உண்மையில் பூர்த்தி செய்தார்களா என்ற பிரச்சினை எழுந்துள்ளது.

குறிப்பாக, நீதிமன்றம் பணக் கணக்கை முடக்கி வைக்குமாறு சமீபத்தில் உத்தரவிட்டதையடுத்து, பொருத்தமான நிபந்தனைகளை கருத்திற்கொண்டு இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, முன்னாள் அமைச்சரும் செல்வந்தருமான கெஹலிய ரம்புக்வெல்ல ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நூறு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளார்.

ஜனாதிபதி நிதி என்பது பொதுப் பணம் என்பதால், பொய்யான தகவல்களை அளித்து அந்தப் பணத்தை அபகரிப்பது பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...