Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

அரச ஊழியர்களுக்கு போனஸ்

T

The Leader Desk

டிசம்பர் 24, 2024 • 7:26 AM

அரச ஊழியர்களுக்கு போனஸ்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஊழியர்களுக்கு 2024ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.
  • திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் நேற்று (23) அனைத்து அமைச்சின் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
  • ஆம் ஆண்டில் இலாபம் ஈட்டியுள்ள மற்றும் குறைந்தபட்சம் 30 சதவீத இலாபத்தை ஒருங்கிணைக்கப்பட்ட நிதிக்கு ஈவுத்தொகையாக அல்லது வரியாக செலுத்திய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 25,000 அல்லது 20,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவாக முன்மொழியப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

ஊழியர்களுக்கு 2024ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் நேற்று (23) அனைத்து அமைச்சின் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து சுற்றறிக்கையில் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

2023ஆம் ஆண்டில் இலாபம் ஈட்டியுள்ள மற்றும் குறைந்தபட்சம் 30 சதவீத இலாபத்தை ஒருங்கிணைக்கப்பட்ட நிதிக்கு ஈவுத்தொகையாக அல்லது வரியாக செலுத்திய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 25,000 அல்லது 20,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவாக முன்மொழியப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கை மூலம் உரிய மேலதிக கொடுப்பனவு வழங்குவதில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை குறித்தும் திறைச்சேரி செயலாளர் விளக்கமளித்துள்ளார்.

இதனால், திறைசேரி குறிப்பாக மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு நிதி வழங்காது என திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அதற்கு அமைச்சரவையின் சிறப்பு அங்கீகாரத்தை பெறுவது கட்டாயம் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...