Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

வல்வெட்டித்துறை வீதி புனரமைக்காமைக்கு, பிரபாகரனின் கிராமம் என்பதுதான் காரணமா?

T

The Leader Desk

டிசம்பர் 24, 2024 • 4:20 AM

வல்வெட்டித்துறை வீதி புனரமைக்காமைக்கு, பிரபாகரனின் கிராமம் என்பதுதான் காரணமா?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • குறித்த உண்ணாவிரத போராட்டம் வல்வெட்டித்துறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) ஆரம்பமாகியுள்ளது.
  • யுத்தத்திற்கு பின்னர் 30 வருடங்களுக்கு மேலாக வல்வெட்டித்துறையிலிருந்து தொண்டைமானாறு வரையான 12.8 கிலோமீற்றர் நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
  • இதன்போது “எமது வீதி எமக்கானது“, “புதிய அரசே புது வீதி அமைத்து தா”, ”ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உண்ணாவிரத போராட்டம் வல்வெட்டித்துறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) ஆரம்பமாகியுள்ளது.

யுத்தத்திற்கு பின்னர் 30 வருடங்களுக்கு மேலாக வல்வெட்டித்துறையிலிருந்து தொண்டைமானாறு வரையான 12.8 கிலோமீற்றர் நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்கின்றனர்.

இதன்போது “எமது வீதி எமக்கானது“, “புதிய அரசே புது வீதி அமைத்து தா”, ”ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த வீதி புனரமைக்கப்படாமைக்கு பல காரணங்கள் உள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கடந்த அரசாங்கத்திடம் இது தொடர்பாக நாம் பல கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் எவ்வித மாற்றமும் நிகழவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இப்பகுதியில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வீடு இருப்பதாலும் இங்குள்ள மக்கள் சுற்றுலா துறையிலே முன்னேற்றம் அடைவதற்கும் கடற்றொழில் சார்ந்த மக்கள் தமது தொழிலை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் தடை ஏற்படுத்தும் வகையிலே குறித்த வீதி அமைக்காமல் புறக்கணிக்கப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே புதிய அரசாங்கம் தற்போது பதவியேற்றிருக்கும் நிலையிலே எதிர்வரும் பாதீட்டில் இந்த வீதிக்கான நிதியை ஒதுக்கி அதனை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

102.jpg

 

103.jpg

 

104.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...