வாகரை பிரதேச பால்சேனை தமிழ் மகாவித்தியாலயத்தில் கலைத் துறையில் கற்ற கோமத்தலாமடு வம்மிவட்டவான் டியச்சந்திரன்_ ரசிகலா தம்பதிகளின் மகள் டெனிஸ்கா வாகரை

பிரதேச வரலாற்றிலேயே முதன் முதல் சட்டத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டவராவார்.

2019இன் க.பொ.த.உயர்தரப் பெறுபேற்றில் கல்குடா கல்வி வலயத்தின் முதன்மைப் பெறுபேறான 2ஏ.பி யும், மாவட்ட நிலையில் 13இனையும் பெற்று பிரதேசத்தித்திற்கு பெருமை சேர்த்ததுள்ளார். வாகரை வரலாற்றில் கடல்கோளாலும் யுத்தத்தாலும் மிகுந்த பாதிப்புற்ற நிலையில் அப்பிரதேசத்திலேயே கற்று சட்டத்துறை பிரவேசத்தை தொடக்கி வைத்த மாணவி இவரென்பது குறிப்பிடத்தக்கது.

வாகரையின் வரலாற்றில் கொடூரமான யுத்தத்தாலும் வறுமையாலும், பொருளாதார பேரிழப்பாலும் தொடர்ந்து பாதிப்புற்ற நிலையில் அதிலிருந்து மீண்டெழுந்துகொண்டிருக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதில் அப்பிரதேச கல்விபுலத்திலிருப்பவர்களால் மட்டும் முடிவதில்லை.

அப்பிரதேசத்துக்கு வெளியிடங்களிலிருந்து கற்பிக்க வரும் அசிரியர்களின் பங்கும் மிகுந்த முக்கியத்துவமுடையதாக இருக்கிறது. இத்தனைக்கும் இம்மாணவி .க. பொ.த.சாதாரண தரம் வரை மட்.வம்மிவட்டவான் வித்தியாலயத்திலேயே கல்வி கற்று உயர் தரத்துக்காக மட்/ பால்சேனை தமிழ் மகாவித்தியாலயத்தில் மிகுந்த வறுமையையும் இளவயதுத் திருமண அபாயங்களையூம் வென்று எவ்வித ரீயூசன் வசதிகளுமின்றி அதிகஷ்ட பிரதேச ஆசிரியர்களின் வழிகாட்டல்களை மட்டும் நம்பி உயர்தரம் கற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவானவர். 

தான் ஒரு பட்டதாரியாக ஆசிரியராக ஆவதையே இலட்சியமாக கொண்டிருந்த இவரின் பெறுபெறு சட்டத்துறைக்கு தகுதியானதாக அமைந்த போதும் அவருக்கு அத்துறையினை பயில்வதற்கான வசதியோ விருப்பமோ இல்லாத நிலையில், வலயக் கல்வி பணிப்பாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலரது முயற்சியாலும்தான் சட்டத்துறைக்கே தனது விருப்பத் தெரிவை வெளிப்படுத்தியிருந்தார்.

அதன் அடிப்படையிலேயே இன்று யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைக்கு தெரிவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை மீன் விற்கும் வியாபாரியாவார். அவர்களது குடும்பத்தின் வறுமைச் சுமையை வென்று சட்டமாணியை உருவாக்கும் முயற்சியில் அவர்களது குடும்பமே பக்கபமாக இருந்துள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

தினகரன் 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி