இலங்கையில் புர்கா தடை மற்றும் மத்ரஸாக்களை மூடுதல் போன்ற விடயங்களில் தலையீடு செய்யுமாறு தென்னாபிரிக்காவின் முஸ்லிம் அமைப்புக்கள், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளன. 

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, சில முஸ்லிம் பெண்கள் அணியும் பாரம்பரிய முழு முகத்தை மூடும் ஆடையான புர்காவை தடை செய்யப் போவதாக, கடந்த வார இறுதியில் பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர அறிவித்திருந்தார்.

 
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவின் ஐக்கிய உலமா சபை, அந்த நாட்டின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் நலேடி பாண்டரிடம் இந்த விஷயத்தில் தலையிடுமாறு கோரியுள்ளது.
 
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள், பிரதான மற்றும் சமூக ஊடகங்களில் கடுமையான வெறுப்புணர்வின் இலக்காக மாறிவிட்டனர்.
 
அத்துடன் புர்கா மீதான தடை மற்றும் மத்ரஸா பாடசாலைகளை மூடுவது என்பது இலங்கையின் பெரும்பான்மையினத்தவரை திருப்திப்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது என்றும் தென்னாபிரிக்க உலமா சபை குற்றம் சுமத்தியுள்ளது.
 
இதேவேளை, இலங்கையில் பிற மதக் குழுக்களும் தங்கள் மத போதனைகளை கற்பிக்கும் நிறுவனங்களைக் கொண்டுள்ளன. எனினும் அவற்றைக் குறிவைக்கும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று சாம்நெட் அமைப்பின் தலைவர் கலாநிதி பைசல் சுலைமான் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே முஸ்லிம்களின் விருப்பத்துக்கு எதிராக கொவிட் உடலங்களை தகனம் செய்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்ட போதும் தென்னாபிரிக்காவின் ஐக்கிய மக்கள் உலமா சபை இது போன்று தலையீட்டுக்கு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி