கொவிட்-19 வைரஸ் தொற்றை தொடர்ந்து, சுகாதார வசதிகள் சீர்குலைந்ததன் காரணத்தால் கடந்த காலங்களில் இலங்கை உட்பட தெற்காசிய

பிராந்தியத்தில் 2 லட்சத்து 39 ஆயிரம் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் மரணங்கள் இடம்பெற்றிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், நேபாள் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து இது தொடர்பான தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

2020 ஆம் ஆண்டில் குழந்தைகளின் அதிக இறப்பு வீதம் இந்தியாவில் பதிவாகியுள்ளதுடன், அது 15.4 வீதம் அதிகரித்துள்ளது. தாய்மார்களின் மரணங்கள் இலங்கையிலும் பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் பக்க விளைவால் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற நிலைமை அதிகரிப்பு, அத்துடன் பிற நோய்கள் தொடர்பாக கவனம் செலுத்தாமை போன்றவை இந்த நிலைமைக்கு காரணம் என இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி