Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

உப்பு இறக்குமதிக்கு டெண்டர் கோரப்படுகிறது

T

The Leader Desk

டிசம்பர் 23, 2024 • 1:54 PM

உப்பு இறக்குமதிக்கு டெண்டர் கோரப்படுகிறது   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வானிலை காரணமாக, 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அவதானம் காரணமாக, 30,000 மெற்றிக் தொன் அயடின் கலந்த உப்பை இறக்குமதி செய்வதற்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
  • ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம், உப்பை இறக்குமதி செய்து உள்ளூர் உப்பு உற்பத்தியாளர்களால் சந்தைக்கு வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
  • இதற்கான டெண்டர் கோரும் பணி, கடந்த 21ஆம் திகதி தொடங்கி, ஜனவரி 2ஆம் திகதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக, கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

வானிலை காரணமாக, 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அவதானம் காரணமாக, 30,000 மெற்றிக் தொன் அயடின் கலந்த உப்பை இறக்குமதி செய்வதற்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

2025ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம், உப்பை இறக்குமதி செய்து உள்ளூர் உப்பு உற்பத்தியாளர்களால் சந்தைக்கு வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

அதன்படி, அக்கூட்டுத்தாபனம் உப்பு இறக்குமதிக்கு தகுதியான சர்வதேச விநியோகஸ்தர்களிடம் இருந்து டெண்டர் கோர நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான டெண்டர் கோரும் பணி, கடந்த 21ஆம் திகதி தொடங்கி, ஜனவரி 2ஆம் திகதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக, கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

உப்பை நேரடியாக இறக்குமதி செய்ய உள்ளூர் உற்பத்தியாளர்கள் அனுமதி கோரிய போதும், அரசு தரப்பில் இருந்து பணிகளை மேற்கொள்ள வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ஜனவரி 31ஆம் திகதி வரை மட்டுமே உப்பு இறக்குமதி செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், டெண்டர் நடைமுறைக்கு பின்னர், அந்த நடவடிக்கைகளுக்கு மிகக் குறுகிய காலமே எஞ்சியுள்ளதால், அந்த காலகட்டத்தில் 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வது நடைமுறையில் கடினமான செயல் என தொழில்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக உப்பை இறக்குமதி செய்ய முடியாத பட்சத்தில், உப்பு தொடர்பான சில பொருட்களுக்கு இடையூறு ஏற்படும் நிலை ஏற்படக்கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏற்படக்கூடிய நிலைமையை கட்டுப்படுத்த, உப்பு இறக்குமதி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என, இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...