Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஜன. 1இல் மின் கட்டணம் குறித்த இறுதி அறிக்கை

T

The Leader Desk

டிசம்பர் 23, 2024 • 10:11 AM

ஜன. 1இல் மின் கட்டணம் குறித்த இறுதி அறிக்கை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வாய்மூல அமர்வுகள், எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • இலங்கை மின்சார சபை, அடுத்த 6 மாதங்களுக்கு கட்டண திருத்தம் செய்யப்படக்கூடாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகளை அண்மையில் சமர்ப்பித்திருந்தது.
  • இந்த முன்மொழிவுகள் தொடர்பில் எழுத்துமூலம் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை, கடந்த 17ஆம் திகதி ஆரம்பமானதுடன், வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதியன்று கண்டி பிரதேசத்தில் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • வாய்மொழி மூலமும் எழுத்து மூலமும் கருத்துகளைப் பெற்ற பின்னர், ஜனவரி 17ஆம் திகதி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

வாய்மூல அமர்வுகள், எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த அமர்வுகளில், மின்சார சபை சமர்ப்பித்த முன்மொழிவு மற்றும் கட்டண திருத்தம் தொடர்பாக, பொது பயன்பாட்டு ஆணைக்குழு சமர்ப்பித்த எதிர் முன்மொழிவு குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் எடுக்கப்பட உள்ளன.

இலங்கை மின்சார சபை, அடுத்த 6 மாதங்களுக்கு கட்டண திருத்தம் செய்யப்படக்கூடாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகளை அண்மையில் சமர்ப்பித்திருந்தது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர் பிரேரணைகளை முன்வைக்கும் போது, ​​மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

இந்த முன்மொழிவுகள் தொடர்பில் எழுத்துமூலம் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை, கடந்த 17ஆம் திகதி ஆரம்பமானதுடன், வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதியன்று கண்டி பிரதேசத்தில் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாய்மொழி மூலமும் எழுத்து மூலமும் கருத்துகளைப் பெற்ற பின்னர், ஜனவரி 17ஆம் திகதி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...