Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் 13 வகை மருந்துகள் தரமற்றவை

T

The Leader Desk

டிசம்பர் 23, 2024 • 6:32 AM

இறக்குமதி செய்யப்படும் 13 வகை மருந்துகள் தரமற்றவை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த இரண்டு வாரங்களுக்குள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் நிபுணத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
  • கடந்த வாரம் 8 மருந்து வகைகளும் இந்த வாரம் ஐந்து வகை மருந்துகளும் உள்ளடங்கலாக, பதின்மூன்று வகை மருந்துகள் அகற்றப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் டொக்டர் ஷமல் சஞ்சீவ தெரிவித்தார்.
  • கடந்த வாரம் பாவனையிலிருந்து விலக்கப்பட்ட 8 வகை மருந்துப் பொருட்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
  • இதேவேளை, கடந்த மூன்று வருடங்களில் மாத்திரம் சுமார் முந்நூறு மருந்து வகைகள் பாவனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் நிமோனியா, மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்களுக்கான மருந்துகள் அடங்குவதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

கடந்த இரண்டு வாரங்களுக்குள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் நிபுணத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் 8 மருந்து வகைகளும் இந்த வாரம் ஐந்து வகை மருந்துகளும் உள்ளடங்கலாக, பதின்மூன்று வகை மருந்துகள் அகற்றப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் டொக்டர் ஷமல் சஞ்சீவ தெரிவித்தார்.

கடந்த வாரம் பாவனையிலிருந்து விலக்கப்பட்ட 8 வகை மருந்துப் பொருட்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த மருந்து வகைகளைக் கொண்டு வந்தவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு, முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த மூன்று வருடங்களில் மாத்திரம் சுமார் முந்நூறு மருந்து வகைகள் பாவனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் நிமோனியா, மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்களுக்கான மருந்துகள்  அடங்குவதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில், ஒவ்வொரு வாரமும் மருந்து வகைகள் அகற்றப்படுவதாகவும் ஆனால் இறக்குமதியில் ஈடுபட்ட அதிகாரிகள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் மருந்துகளை இனங்காண சரியான வேலைத்திட்டத்தை ஏற்படுத்த முடியவில்லை எனவும் வைத்தியர் ஷமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வாரமும் தரம் குறைந்த மருந்துகளை அகற்றுவதனால், திறைசேரி பாதிக்கப்படுவதாகவும் எனவும் தற்போதைய சுகாதார அமைச்சர் இவ்விடயங்கள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அனைத்து அரச நிறுவனங்களும் போதைப்பொருள் இறக்குமதி பொறிமுறையில் தலையிட்டு அடுத்த வருடம் இந்நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், இல்லையேல் வெற்றிகரமான முறைமை மாற்றத்தை நம்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...