Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

'வர்த்தமானி வரும் வரை அரிசி இறக்குமதி இல்லை'

T

The Leader Desk

டிசம்பர் 23, 2024 • 5:00 AM

'வர்த்தமானி வரும் வரை அரிசி இறக்குமதி இல்லை'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • தனியார் துறைக்கான அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த 20ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், அன்றைய தினம் 67,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
  • எவ்வாறாயினும், அரிசியை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என அரசாங்கம் அண்மையில் குறிப்பிட்டிருந்தது.
  • இதேவேளை, அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 52,000 மெற்றிக் தொன் அரிசி தொகை அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
எழுத்து அளவு:

நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனியார் துறைக்கான அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த 20ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், அன்றைய தினம் 67,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரிசியை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என அரசாங்கம் அண்மையில் குறிப்பிட்டிருந்தது.

எவ்வாறாயினும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாததால், அரிசியை அரசாங்கத்தினால் அல்லது அரசாங்கத்தின் தலையீட்டினால், அரிசி இறக்குமதி செய்தாலும், அதனை இலங்கை சந்தைக்கு விடுவிக்க முடியாது என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 52,000 மெற்றிக் தொன் அரிசி தொகை அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

எவ்வாறாயினும், அரிசி இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (23) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் வெளியிடப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முறையான அரிசி விநியோகம் இன்மையால் மூடப்பட்ட மரதகஹமுல விசேட மொத்த விற்பனை நிலையத்தின் அரிசிக்கடைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தனியார் துறையினரின் தலையீட்டில் அரிசி தொகை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'வர்த்தமானி வரும் வரை அரிசி இறக்குமதி இல்லை' | Tamil Leader | We Lead the Nation