Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஜன. 2ஆம் திகதி ஆரம்பம்

T

The Leader Desk

டிசம்பர் 23, 2024 • 4:55 AM

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஜன. 2ஆம் திகதி ஆரம்பம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம், ஜனவரி 02ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
  • மேலும், அனைத்துப் பாடசாலைகளின் மூன்றாம் தவணை, ஜனவரி 24 வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்றும் அமைச்சு கூறுகிறது.
  • இருப்பினும், பாடசாலை உபகரணங்களின் விலை இன்னும் அதிகமாக உள்ளதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எழுத்து அளவு:

பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம், ஜனவரி 02ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்துப் பாடசாலைகளின் மூன்றாம் தவணை, ஜனவரி 24 வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்றும் அமைச்சு கூறுகிறது.

இதேவேளை, புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கவுள்ள நிலையில், பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்களை வாங்குவதில் பெற்றோர்கள் மும்முரமாக உள்ளனர்.

இருப்பினும், பாடசாலை உபகரணங்களின் விலை இன்னும் அதிகமாக உள்ளதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சில பாடசாலை உபகரணங்களின் விலைகள் ஏறக்குறைய இரு மடங்காக உயர்ந்துள்ளதென்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை அரசாங்கம் நீக்கினால், இந்த நிலைமைக்கு தீர்வு கிடைக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுபொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை உடனடியாக நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...