Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்

T

The Leader Desk

டிசம்பர் 23, 2024 • 4:35 AM

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதில் சிக்கல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திகதியை அறிவிப்பதற்கு சட்டரீதியான தடை இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்ய அரசாங்கம் அண்மையில் தீர்மானித்துள்ளது.
  • இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க, தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டவுடன் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என்றார்.
எழுத்து அளவு:

திகதியை அறிவிப்பதற்கு சட்டரீதியான தடை இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க, தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டவுடன் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என்றார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் சட்டத்தில், ஜனவரி மாதத்துக்குள் திருத்தம் மேற்கொள்ளப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் சட்டத்தை விரைவில் திருத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்ய அரசாங்கம் அண்மையில் தீர்மானித்துள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் மீண்டும் வேட்புமனுக்களை கோர வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களுக்கு சுமார் எண்பதாயிரம் பேர் தோற்றவுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து பல செலவு அறிக்கைகள் வரவழைக்கப்படுவதால், இது நடைமுறையில் கடினமான பணியாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...