Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிலிருந்த முப்படையினர் இன்று முதல் நீக்கம்

T

The Leader Desk

டிசம்பர் 23, 2024 • 4:15 AM

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிலிருந்த முப்படையினர் இன்று முதல் நீக்கம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
  • எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
எழுத்து அளவு:

முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இதன்படி, இன்று முதல் பொலிஸ் அதிகாரிகள் மாத்திரமே முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக போதியளவு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 6 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்படும் எனவும், அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

முப்படையினர் நீக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அதிக செலவு காரணமாக அவர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...