Tamil Leader News
முக்கியம்
தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●
செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மீதும் விசாரணை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 23, 2025 • 3:39 PM

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மீதும் விசாரணை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பாகவும் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
  • அவர் இன்று (23) இடம்பெற்ற பொலிஸாரின் விசேட ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்ததோடு, விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால், அவரை கைது செய்வது தொடர்பில் தற்போது எதனையும் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • அரச நிதியை தனது விருப்பப்படி பயன்படுத்த முடியாது.” என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் டிலீப பீரிஸ் கருத்து தெரிவித்ததோடு, இந்த பயணத்திற்கான செலவினங்களுக்கு முன்அனுமதி பெறப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • ஏறக்குறைய 07 மணிநேரம் நீடித்த வழக்கு விசாரணையின் பின்னர், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, சந்தேகநபரை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
எழுத்து அளவு:

தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பாகவும் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (23) இடம்பெற்ற பொலிஸாரின் விசேட ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்ததோடு, விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால், அவரை கைது செய்வது தொடர்பில் தற்போது எதனையும் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நேற்று நீதிமன்றத்தில், “முன்னாள் ஜனாதிபதி செயலாளர் இங்கு தவறான முறையில் செயற்பட்டுள்ளார். அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளை சரியான பாதைக்கு வழிநடத்த வேண்டும். அரச நிதியை தனது விருப்பப்படி பயன்படுத்த முடியாது.” என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் டிலீப பீரிஸ் கருத்து தெரிவித்ததோடு, இந்த பயணத்திற்கான செலவினங்களுக்கு முன்அனுமதி பெறப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி பதவியில் இருந்த காலத்தில் அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு திரும்பும் வழியில், லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இடம்பெற்ற தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் அழைக்கப்பட்டிருந்தார்.

நான்கு மணிநேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஏறக்குறைய 07 மணிநேரம் நீடித்த வழக்கு விசாரணையின் பின்னர், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, சந்தேகநபரை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு விளக்கமறியல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதன் பின்னர் இன்று மாலை முன்னாள் ஜனாதிபதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு காரணமான சம்பவம் தொடர்பில், இதற்கு முன்னரும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்தும் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...