Tamil Leader News
முக்கியம்
தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●
செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று கைது செய்யப்படுவாரா?

T

The Leader Desk

ஆகஸ்ட் 22, 2025 • 2:48 AM

முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று கைது செய்யப்படுவாரா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
  • இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சண்ட்ரோ பெரேரா ஆகியோரிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.
  • முன்னாள் ஜனாதிபதி இலண்டன் சென்றது, தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகும்.
எழுத்து அளவு:

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு இலண்டன் ஊடாக நாடு திரும்பிய போது அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த அறிவிப்பை வழங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி இலண்டன் சென்றது, தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகும்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சண்ட்ரோ பெரேரா ஆகியோரிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்று தனது வாக்குமூலத்தை வழங்கிய பின்னர், முன்னாள் ஜனாதிபதி இன்று (22) கொழும்பு, ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்த உள்ளார்.

எவ்வாறாயினும், இன்றைய தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் செல்லும் முன்னாள் ஜனாதிபதியை, விசாரணையின் போது கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக, அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...