Tamil Leader News
முக்கியம்
தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●
செய்திகள்

குமணன் மீதான விசாரணைக்கு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 22, 2025 • 2:41 AM

குமணன் மீதான விசாரணைக்கு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் கண்டனம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சந்தர்ப்பங்களில், சட்டத்தை அமுலாக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான உதவியை வழங்குவதற்கு சட்டத்தை மதிக்கும் பிரஜைகளாக தமது சங்கம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
  • பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் குமணன் கணபதிபிள்ளை விசாரணை செய்யப்பட்டதைக் கண்டித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ள குறித்த சங்கம், அதில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
  • எனவே, ஊடகவியலாளர் குமணன் கணபதிபிள்ளையை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்கு தமது சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிடுவதுடன், அவருக்கு எதிராக நாட்டின் பொதுச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

சந்தர்ப்பங்களில், சட்டத்தை அமுலாக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான உதவியை வழங்குவதற்கு சட்டத்தை மதிக்கும் பிரஜைகளாக தமது சங்கம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் குமணன் கணபதிபிள்ளை விசாரணை செய்யப்பட்டதைக் கண்டித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ள குறித்த சங்கம், அதில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இலங்கை டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் மஞ்சுள பஸ்நாயக்க மற்றும் செயலாளர் துஷாரா செவ்வந்தி விதாரண ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ஊடகவியலாளர்களை விசாரிப்பதற்கும் அவர்களைப் பற்றி விசாரணை செய்வதற்கும் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நாங்கள் அருவருக்கத்தக்க வகையில் கண்டிக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஊடகவியலாளர் குமணன் கணபதிபிள்ளையை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்கு தமது சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிடுவதுடன், அவருக்கு எதிராக நாட்டின் பொதுச் சட்டத்தை அமுல்படுத்துமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளரும் மனித உரிமைப் பாதுகாவலருமான குமணன், பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸாரால் அழைக்கப்பட்டமை சர்வதேச ரீதியில் கண்டிக்கப்பட்ட போதிலும், அவர் முல்லைத்தீவு, அளம்பிலில் உள்ள பயங்கரவாத எதிர்ப்புப் புலனாய்வுப் பிரிவின் உப பிரிவில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...