இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் 4 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் தொடர்ந்து 5வது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின்  இணைப்பாளர்களின் ஒருவரான எஸ்.சிவயோகநாதன் தலைமையில் ஆரம்பமான இந்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள்,,தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆலய முன்றலில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமானதுடன் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு பலக்கலைக்கழக மாணவர்கள்,சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் ஆதரவினை வழங்கிவருகின்றனர்.

இன்று தமிழ் மக்கள் வடகிழக்கில் அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவருவதாகவும் ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் இந்த நாட்டில் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலையுள்ளதாகவும் அதன் காரணமாக ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்ந்து முடிவினை எடுக்கவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் 5வது நாளான இன்று மட்டக்களப்பு பொலிஸார் வருகை தந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை அனுமதி பெறாமல் புகைப்படம் எடுத்ததன் காரணமாக சிறுவாய்த்தர்க்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்து.

IMG-20210307-WA0001.jpg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி