கொரோனா தொற்று உறுதியானவர்களை அடக்கம் செய்ய இரணைதீவு பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டமையானது தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரிக்கும் சூழ்ச்சியின் விளைவு என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சாடியுள்ளார்.

கிளிநொச்சி – இரணைதீவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீதரன், ஜெனீவா பிரேரணையை செயலிழக்க செய்வதற்காகவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

அரசாங்கத்தின் இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழர்களும் முஸ்லீம்களும் நிதானமாக கையாள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி