Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

சந்தேகநபரை அடையாளம் காண முடியவில்லை: அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

T

The Leader Desk

ஜனவரி 22, 2025 • 2:45 PM

சந்தேகநபரை அடையாளம் காண முடியவில்லை: அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது.
  • அதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • அநுராதபுரத்தின் ரம்பேவ பகுதியில் நேற்று (21) அதிகாலை போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
  • இந்த விடயம் தொடர்பாக பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம், அநுராதபுரம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
எழுத்து அளவு:

உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு பிரேரணையை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன், குறித்த வழக்கு அழைக்கப்பட்ட போது, ​​அநுராதபுரம் பொலிஸார் சந்தேக நபரை "அர்ச்சுனா லோச்சன்" என்று பெயரிட்டனர்.

ஆனால், சாரதி அனுமதிப் பத்திரத்தில் அவரது பெயர்  இராமநாதன் அர்ச்சுனா என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, சரியான சந்தேகநபரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தின் ரம்பேவ பகுதியில் நேற்று (21) அதிகாலை போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதன்படி, போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.

இதையடுத்து, மோட்டார் போக்குவரத்துச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ், பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன்படி சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விடயம் தொடர்பாக பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம், அநுராதபுரம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சந்தேகநபரை அடையாளம் காண முடியவில்லை: அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு | Tamil Leader | We Lead the Nation