Tamil Leader News
முக்கியம்
தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●
செய்திகள்

அரச நிறுவனங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற ஒரு வாரகால அவகாசம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 21, 2025 • 3:27 AM

அரச நிறுவனங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற ஒரு வாரகால அவகாசம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • "செயிரி வாரம்" என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 04 ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய திட்டத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்படவுள்ளதுடன், தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களை அடையாளம் கண்டு தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவது இதன்போது இடம்பெறவுள்ளது.
  • அரச நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் சுதந்திரமாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கு ஏற்ற சுத்தமான, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் ஆபத்தற்ற சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

"செயிரி வாரம்" என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 04 ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் சுதந்திரமாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கு ஏற்ற சுத்தமான, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் ஆபத்தற்ற சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன், அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண தலைமை செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் பிரதானிகள் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய திட்டத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்படவுள்ளதுடன், தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களை அடையாளம் கண்டு தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவது இதன்போது இடம்பெறவுள்ளது.

இந்த வாரத்தில் அரசு நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களின் தொகுப்பையும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...