Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த இடமளியோம்: நினைவேந்தல் குறித்து இனி அதிக கவனம்'

T

The Leader Desk

ஜனவரி 21, 2025 • 4:23 AM

‘அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த இடமளியோம்: நினைவேந்தல் குறித்து இனி அதிக கவனம்'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம்." - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
  • “அப்படியானவர்களில் 10 பேர் வரை தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
  • "உயிழந்த தமது உறவுகளை நினைவேந்த எந்த இனத்தவர்களுக்கும் முழு உரிமையுண்டு.
எழுத்து அளவு:

இடமளிக்கமாட்டோம். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம்." - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"அரசியல் கைதிகள் என்று சொல்லப்படுபவர்கள் தொடர்பில் நீதி அமைச்சர் தெரிவித்த கருத்தை சிலர் மீண்டும் அரசியலாக்கியுள்ளனர். உண்மையில் நீதிமன்ற வழக்குகளில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு தமிழர்களைத்தான் அரசியல் கைதிகள் என்று ஒரு தரப்பினரும், புலிகள் அமைப்பின் சந்தேகநபர்கள் என்று இன்னொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

“அப்படியானவர்களில் 10 பேர் வரை தற்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்குகளை ஆராய்ந்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். எனவே, அரசியல் கைதிகள் என்று சொல்லப்படுபவர்களை வைத்து அரசியல் நடத்த இடமளிக்கமாட்டோம்.

"உயிழந்த தமது உறவுகளை நினைவேந்த எந்த இனத்தவர்களுக்கும் முழு உரிமையுண்டு. அதை எமது அரசு தடுத்து நிறுத்தாது.

“ஆனால், வடக்கு, கிழக்கில் சில நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் தலையீடு ஆதிக்கம் செலுத்துவதால் அது வெளியில் வேறொரு கோணத்தில் பார்க்கப்படுகின்றது.

“தெற்கில் உள்ள ஒரு தரப்பினர் அதைப் பயங்கரவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். இதனால் வடக்கு - தெற்கு அரசியல்வாதிகளுக்கிடையில் பொது வெளியில் கருத்து மோதல்கள் இடம்பெறுகின்றன.

“எனவே, நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும். நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்துவது எமது நோக்கம் அல்ல" என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த இடமளியோம்: நினைவேந்தல் குறித்து இனி அதிக கவனம்' | Tamil Leader | We Lead the Nation