ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுகின்றது.ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான UNESCO 2011 நவம்பர் 3 ஆம் திகதி உலக வானொலி தினத்தை அறிவித்தது.

முதலாவது உலக வானொலி தினம் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பிப்ரவரி 13-இல் கொண்டாடப்பட்டது.

“புதிய உலகம் – புதிய வானொலி ” எனும் தொனிப்பொருளில் இவ்வருட உலக வானொலி தினம் கொண்டாடப்படுகின்றது.

ஒலி அதிர்வுகளின் மூலம் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செய்திகளை அனுப்பும் சோதனையை மார்கோணி 1901 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி அமெரிக்காவிலுள்ள ஒரு மலையின் உச்சியில் செய்து வெற்றி கண்டார்.

இந்த வெற்றியின் பின்னர் உருவானது தான் வானொலி.

இதனைத் தொடர்ந்தே நாம் தற்பொழுது பாவிக்கும் நவீன வானொலிகள் உருவாகின.

வானொலி ஒலிபரப்பு சேவையைக் கொண்டாடவும் சர்வதேச வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும் வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.

ஒரு தரமான வானொலி சேவை என்பது சிறந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டும்.

பொழுதுபோக்கு அம்சங்கள், தகவல் பரிமாற்றங்களுக்கு அப்பால் சாதாரண சமூகத்தில் ஏற்படும் முக்கிய பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும்.

இசையை உணரும் ஒவ்வொரு ரசிகனும் இரசனைமிக்க கலைஞன் ஆகின்றான்.

உலகைக் காண முடியாத பலருக்கும் உலகை உணரச்செய்யும் இசையை செவிகளில் சேர்க்கும் சேவையை பல வருடங்களாக வானொலி ஆற்றி வருகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி