மாத்தறை பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் கேட்கும் திறனை இழந்த மாணவனுக்கு நஷ்டஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 650,000 ரூபாயை நஷ்டஈடாக வழங்குமாறு அதில், 150,000 ரூபாயை மாணவனை தாக்கிய ஆசிரியரும் எஞ்சிய 500,000 ரூபாயை அரசாங்கமும் வழங்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி ஆசிரியர் மேற்கொண்ட தாக்குதலில் 15 வயது மாணவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.