இலங்கையில் யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு வெளியே உள்ள தீவுகளில் மீளுருவாக்கக் கூடிய மூன்று  எரிசக்தி திட்டங்களைத் தொடங்க சீன நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குவதை இந்தியா கடுமையாக எதிர்ப்பதாக ” தி சண்டே டைம்ஸ்” தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையை இந்தியா மற்றும் ஜப்பானுக்கு வழங்காதிருக்க  அமைச்சரவை முடிவு செய்வதற்கு முன்பே இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது. கிழக்கு கொள்கலன் முனையை இந்தியா மற்றும் ஜப்பானிடம் வழங்காதிருக்கும்  அமைச்சரவை முடிவை இந்தியா கடுமையாக எதிர்த்துள்ளது.

மீளுற்பத்தி எரிசக்தி திட்டத்திற்கு ஜனவரி 18ம் திகதி அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

மின் உற்பத்தித் திட்டத்தை சீனாவிடம் ஒப்படைப்பது தனது நாட்டிற்கு பாதுகாப்பு சிக்கல்களை உருவாக்கும் என்று இந்தியா நம்புவதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. மீளுற்பத்தி செய்யக் கூடிய  மூன்று எரிசக்தி திட்டங்கள் தொடங்கப்படும் தீவுகளாவன நெடுந் தீவு, அணலைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய தீவுகளாகும். பாக்கு நீரிணையால் பிரிக்கப்பட்ட தீவுகள் இந்தியாவின் கடற்கரையை அன்மித்து அமைந்துள்ளன.

டெல்ப் தீவானது இந்தியாவின் கடற்கரை நகரமான ராமேஸ்வரத்திலிருந்து 48 கி.மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

எரிசக்தி திட்டத்தின் உள்ளூர் பங்காளியான இலங்கை மின்சார சபை  (சி.இ.பி), சீனாவின் எடெக்வின் நிறுவனத்துடனான கூட்டு முயற்சிக்கு நிலத்தை அடையாளம் கண்ட பின்னர் திட்டம் சம்பந்தமான விவரங்களை நிறைவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியளிக்கிறது.

இது 12 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டமானது இது சீனாவின் எம்.எஸ். / சினோசர்-எடெக்வின் கூட்டு முயற்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. சீன நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குவது அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் நிலைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி