”கொரோனா  தொற்றுக்கு வெக்சின் தாராங்க எல்லாருக்கும் கிடச்சா நல்லாருக்கும். ஏன்னா நோய் குணமாகிருமே?” என்கிறார் திருகோணமலையைச் சேர்ந்த மொஹமட் இர்பான், ”எல்லாருக்கும் ஊசிய போட்டுட்டா வேல முடிஞ்சுரும். நோய் வராதே” என்கிறார் கொழும்பைச் சேர்ந்த நிர்மலன் சுவாமிநாதன். ”அதான் ஊசி வந்துட்டே பிறகென்ன எல்லா இடத்துலயும் சுற்றித்திரியலாம். வழமபோல எங்கட சோலிய பாக்கலாம்” என்கிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவசிதம்பரம் கிரி.

கொரோனா தொற்றுக்கான சுகாதார நடைமுறைகள்  ஊரடங்கு உத்தரவுகள், தனிமைப்படுத்தல் முகக்கவசம் என்ற வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டிருந்த இலங்கை மக்கள் இப்போது தடுப்பூசி தொடர்பில் முனுமுனுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனினா தடுப்பூசியை இலங்கையில் கொரோனா நோய்த்தொற்றுக்கான அவசரகாலத்திற்கு பயன்படுத்த தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி அளித்த நிலையில்,  இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன.

இந்திய அரசாங்கம் வழங்கிய கொரோனா தடுப்புசிகளின் முதல்  தொகுதி இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கடந்த 28ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்தார். 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றல் மேல் மாகாணத்தின் 06 முக்கிய வைத்தியசாலைகளில் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமானது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்னின்று செயற்படும் சுமார் ஒரு இலட்சத்து 55 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள், ஒரு இலட்சத்து 20 ஆயிரம்   முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

அதன் பின்னர் 60  வயதுக்கு மேற்பட்ட பொது மக்கள் 31 இலட்சத்து 59 ஆயிரத்து 800  பேருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களைக் கையாளும் பணியாளர்கள் 2 இலட்சத்து 25 ஆயிரத்து 700  பேருக்கும், நோய்களுடன் வாழும் 18 முதல் 59 வயதுக்குட்பட்ட 32  இலட்சத்து 22 ஆயிரத்து 510 பேருக்கும்  40 முதல் 59 வயதுக்குட்பட்ட எவ்வித நோய் அறிகுறிகளும் அற்ற 31 இலட்சத்து 14 ஆயிரத்து 660 பேருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தடுப்பூசியே தவிர நோய்க்கான மருந்தல்ல எனினும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவுள்ள பொது மக்களில் பெரும்பாலானவர்கள் இதனை ஒரு மருந்தாக கருதிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு பெருந்தொற்று அல்லது ஒரு மிக மோசமான தொற்றுநோய் மனிதர்களைத் தாக்கி, அவர்களுக்கு அடுத்தடுத்து மிகப்பெரிய உடல்நல பாதிப்புகளை உருவாக்கி, ஏதேனும் ஓர் உறுப்பு சேதம் அல்லது உயிர் பாதிப்போ நிகழ்ந்தால், அந்தக் கிருமியையும் அதன் நோய் தரும் நீட்சியையும் தடுக்கவே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ”தடுப்பு மருந்து” என்பது ஒரு நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை ஊக்குவிக்கும்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி