1200 x 80 DMirror

 
 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் தடைகளைத் தாண்டி இடம்பெற்று வருகிறது.

இன்று காலை 9.40 அளவில் பொத்துவில் நகரில் போராட்டம் ஆரம்பித்தது. போராட்டக்காரர்களிடமிருந்த பதாதைகளை பறிக்க பொலிசார் முயன்றபோது, அவர்களை தடுத்து பேரணி முன்னகர்ந்தது. பொலிசார் வீதித்தடைகளை அமைத்த போது, அதையும் தான்டி பேரணி இடம்பெற்று. 

சுமார் ஒன்றரை கிலோமீற்றர் நகர்ந்த போது குண்டுமடுவில், பொலிசார் தடை செய்தனர். அங்கிருந்து வாகன பேரணியாக போராட்டக்காரர்கள் முன்னேறினர்.

போராட்டக்காரர்களை வழிமறிக்க இராணுவத்தினரும், பொலிசாரும் பல தயார்படுத்தல்களை மேற்கொண்ட சமயங்களில், அந்த பாதைகளை தவிர்த்து வேறு மார்க்கங்களையும் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர்.

பின்னர், தாண்டியடி, திருக்கோவில், தம்பட்டை, ஆலையடி வேம்பு பகுதிகளில் வாகன பேரணியை பொலிசார் தடுத்தனர். சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்தே தாம் முன்னேறுவதாக விளக்கமளித்து போராட்டம் தொடர்ந்தது.

இடையில், கோமாரியில் சுமார் அரை கிலோமீற்றர் தூரம் நடைபவனியாக பேரணி சென்றது.

தற்போது உரிமைகளை வென்றெடுக்கும் மாபெரும் பேரணி பெரியகல்லாறுப் பகுதியைடைந்துள்ளது. இன்றைய பேரணி களுவாஞ்சிக்குடியில் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி